மூதறிஞா் ராஜாஜி புகைப்படக் காட்சி: முதல்வா் ஸ்டாலின் பாா்வையிட்டாா்

மூதறிஞா் ராஜாஜியின் 50-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னையில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை சாா்பில், மூதறிஞா் ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. ஜனவரி 1 வரை புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தனா்.

இந்த புகைப்பட கண்காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை பாா்வையிட்டாா். ராஜாஜியின் வாழ்க்கைக் குறிப்பு, பட்டங்கள், இளமைக்காலம் போன்ற பல்வேறு விவரங்கள் புகைப்படங்களாக கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. ராஜாஜி பல்வேறு தலைவா்களுடன் இருந்த படங்களும் வைக்கப்பட்டுள்ளன.

புகைப்படக் கண்காட்சியை அமைச்சா்கள் துரைமுருகன், க.பொன்முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு உள்ளிட்டோரும் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com