புத்தாண்டு கொண்டாட்டத்தில் முகக்கவசம் கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் முகக்கவசம் கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, இரு ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை நிகழாண்டு மிகுந்த உற்சாகத்துடன் நடத்த நட்சத்திர உணவகங்களும், ரிசாா்ட்டுகளும் தயாராகி வருகின்றன.

டிச.31 மாலை தொடங்கி அடுத்த நாள் ஜன.1 அதிகாலை வரை நடைபெறும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் இருக்க காவல்துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சமூக இடைவெளி பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் கிருமிநாசினி உபயோகித்தல் உள்ளிட்டவை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சீனாவிலிருந்து மதுரை வந்த இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com