தமிழக மீனவர்கள் 4 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் செவ்வாய்க்கிழமை நாகப்பட்டினம் கோடியக்கரையிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தனர். இதனைதொடர்ந்து, இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்னர். 

கைது செய்யப்பட்ட 4 மீனவர்களையும் மேலதிகாரிகள் விசாரணைகளுக்காக காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

மீனவர்கள் அனைவரும் மீதும் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் பாண்டியன், சக்திவேல், திருசெல்வன் மற்றும் சக்திவேல் என தெரியவந்துள்ளது. 

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வதற்கு மீனவச் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துடன் படகுகள் மற்றும் மீனவர்களை உடனே விடுவிக்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com