
புதுச்சேரியில் நள்ளிரவு 2 மணி வரை புத்தாண்டை கொண்டாட மாவட்ட ஆட்சியர் அனுமதியளித்துள்ளார்.
புதுச்சேரியில் கடற்கரை காந்தி சிலைத் திடலில் புத்தாண்டு தினக் கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதே நேரத்தில் விடுதிகளில் கேளிக்கை நிகழ்ச்சிகளும் புத்தாண்டுக்கு முதல் நாள் இரவு விடிய விடிய நடத்தப்படும்.
ஆனால் இந்த ஆண்டு அதாவது வரும் 2023 ஜனவரி 1 ஆம் தேதி (ஞாயிறு) புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அதிகாலை 1 மணிக்குப் பிறகு தடை விதிக்கப்படுவதாக புதுச்சேரி ஆட்சியா் இ.வல்லவன் அறிவித்திருந்தார்.
தற்போது இந்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மேலும் ஒரு மணிநேரம் கூடுதலாக அனுமதி வழங்கி ஆட்சி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி புதுச்சேரியில் நள்ளிரவு 2 மணி வரை புத்தாண்டை கொண்டாடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே புத்தாண்டையொட்டி, புதுச்சேரியில் சனிக்கிழமை முதல் (டிச.31) 1500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா் என்று, போக்குவரத்துப் பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நார சைதன்யா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.