பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்: ஆட்சியர்களே முழு பொறுப்பு என தமிழக அரசு உத்தரவு
அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு சென்றடைவதை மாவட்ட ஆட்சியர்களே உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு சென்றடைவதை மாவட்ட ஆட்சியர்களே உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வருகிற ஜன.15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகையுடன் ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை வழங்கப்படும் என சமீபத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். இருப்பினும் தமிழக அரசின் சாா்பில் வழங்கப்படவுள்ள இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் ஜனவரி 3 முதல் 8 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. வருகிற ஜனவரி 9 ஆம் தேதி முதல்வர் இதனை தொடங்கிவைக்கிறார். இந்த நிலையில் அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் சென்றடைவதை மாவட்ட ஆட்சியர்களே உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரிசி, பச்சரிசி, முழு கரும்பு ஆகியவை தரத்துடன் இருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தகுதியான பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...