

2022-23 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இனிப்பும், கசப்பும் கலந்த கலவையாக உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (பிப்.1) தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட் தொடர்பாக பல்வேறு தலைவர்களும், பொருளாதார நிபுணர்களும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்,
மத்திய பட்ஜெட் இனிப்பும், கசப்பும் கலந்த கலவையாக உள்ளதாக கூறினார். தேமுதிக ஒரேநாடு, ஒரே பதிவு திட்டம், வேளாண் பொருள்களை ரூ.2.37 லட்சம் கோடிக்கு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம், அனைத்து மாநில மொழிகளில் 200 கல்வித்தொலைகாட்சி ஆகியவை மத்திய பட்ஜெட்டில் வரவேற்க தக்கவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.