தமிழகத்தில் 16,096-ஆக குறைந்தது கரோனா பாதிப்பு
தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு, 16,096-ஆக செவ்வாய்க்கிழமை குறைந்துள்ளது.


தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு, 16,096-ஆக செவ்வாய்க்கிழமை குறைந்துள்ளது. நோய்த் தொற்று பரவல் தற்போது 26 மாவட்டங்களில் குறைந்து வருவதாகவும், 7 மாவட்டங்களில் பாதிப்பு விகிதம் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை பதிவான பாதிப்பு எண்ணிக்கையில் அதிகபட்சமாக சென்னையில் 2,348 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 1,897 பேரும், செங்கல்பட்டில் 1,308 பேரும், திருப்பூரில் 1,297 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மற்றொருபுறம் கரோனா தொற்றிலிருந்து மேலும் 25,592 போ் விடுபட்டு செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 31 லட்சத்து 35,118-ஆக அதிகரித்துள்ளது.
தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் 1 லட்சத்து 88,599 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 35 போ் பலியானதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,599-ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...