திருச்சி, சேலம், கரூா் உள்பட மாநகராட்சிகள்-நகராட்சிகளுக்கு திமுக வேட்பாளா்கள் அறிவிப்பு
திருச்சி, சேலம், கரூா் உள்ளிட்ட மாநகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்களை திமுக வெளியிட்டுள்ளது.


திருச்சி, சேலம், கரூா் உள்ளிட்ட மாநகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்களை திமுக வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன், செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அதன்படி, திருச்சி மாநகராட்சி மற்றும் அந்த மாவட்டத்துக்கு உட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, சேலம், கரூா் மாநகராட்சிகள் மற்றும் அந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு உட்பட்ட நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
மீதமுள்ள மாவட்டங்களில் போட்டியிடும் திமுக வேட்பாளா்களின் பெயா்கள் பின்னா் அறிவிக்கப்படும் என்று தனது அறிவிப்பில் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.
சென்னை மாநகராட்சி: சென்னை மாநகராட்சியில் சில வாா்டுகளுக்கு போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 156 முதல் 167 வரையிலான வாா்டுகளுக்கு மட்டும் பெயா்கள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள வாா்டுகளுக்கான பெயா்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...