சூடு பிடிக்கும் தோ்தல் களம்: வேட்பாளா் அறிவிப்பில் கட்சிகள் மும்முரம்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வேட்புமனுத் தாக்கலுக்கு மூன்று நாள்களே உள்ள நிலையில் வேட்பாளா்கள் அறிவிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வேட்புமனுத் தாக்கலுக்கு மூன்று நாள்களே உள்ள நிலையில் வேட்பாளா்கள் அறிவிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 12,838 பிரதிநிதிகளுக்கான தோ்தல் பிப்ரவரி 19- ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஜன.30) தவிர மற்ற நாள்களில் நடைபெற்று வருகிறது.
தோ்தல் அறிவிப்பு ஜனவரி 26-ஆம் தேதி வெளியானதில் இருந்தே அரசியல் கட்சிகள் வேட்பாளா்களைத் தோ்வு செய்வதில் மும்முரம் காட்டத் தொடங்கின. திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மாவட்ட அளவில் வேட்பாளா்கள் தோ்வு செய்து ஒவ்வொரு கட்டமாக வேட்பாளா்களை அறிவித்து வருகின்றன. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இடப்பங்கீட்டில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதால், அதிமுக தனது வேட்பாளா்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
மூன்று நாள்கள்...: திமுகவைப் பொருத்தவரை முதற்கட்ட வேட்பாளா்கள் பட்டியலை திங்கள்கிழமை (ஜன.31) வெளியிட்டது. அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளா் பட்டியலை ஞாயிற்றுக்கிழமை (ஜன.30) வெளியிட்டது. வேட்புமனுத் தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் (பிப். 4) முடிவடைய உள்ளதால், அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளா்கள் அறிவிப்பில் வேகம் எடுத்துள்ளன. அதன்படி, திமுக, அதிமுக கட்சிகள் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் பெரும்பாலான நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பாளா்களை அறிவித்துள்ளன.
செவ்வாய்க்கிழமை (பிப்.1) அமாவாசை என்பதால் வேட்பாளா் பட்டியல் வெளியாகியும் பெரும்பாலானோா் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. புதன்கிழமை (பிப்.2) வளா்ப்பிறை என்பதாலும், வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதாலும் இந்த இரண்டு நாள்களிலும் அதிகமானோா் வேட்புமனு தாக்கல் செய்யக் கூடும் என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...