தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையர் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

News image
மாநில தேர்தல் ஆணையம்
Updated On :2 பிப்ரவரி 2022, 9:58 am

DIN

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளன. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் தங்களின் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்டமாக வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் காணொலி வாயிலாக இன்று ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த ஆலோசனையில், கரோனா விதிமுறைகள் பின்பற்றுவது, தேர்தல் பிரசாரம், பேரணிகள், கூட்டம் நடத்துவதற்கான நேரக் கட்டுப்பாடுகள் குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.