புதிய பாதை திட்டம்: தெற்கு ரயில்வே பகுதிக்குட்பட்ட 11 புதிய திட்டங்களில் 2 திட்டங்கள் கேரளப் பகுதியில் திருநின்னவாயா-குருவாயூா் (35 கி.மீ.), அங்கமாலி-சபரிமலா (116 கி.மீ) ஆகிய திட்டங்கள் வருகின்றன. மீதம் 9 திட்டங்கள் தமிழக பகுதிகளில் வருகின்றன. இதில், திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை திட்டம் (70 கி.மீ.), திண்டிவனம்-நகரி (179.2 கி.மீ.), அத்திப்பட்டு-புத்தூா் (88.30 கி.மீ.), ஈரோடு-பழனி (91.05 கி.மீ.), சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக கடலூா் (179.28 கி.மீ), மதுரையில் இருந்து அருப்புக்கோட்டைவழியாக தூத்துக்குடி(143.5 கி.மீ. ), ஸ்ரீபெரும்புதூா்-கூடுவாஞ்சேரி (60 கி.மீ.), மொரப்பூா்-தருமபுரி(36 கி.மீ.) ஆகிய 8 திட்டங்களுக்கு தலா ரூ.1,000 மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல, கேரளத்தில் இரண்டு புதிய பாதை திட்டங்களுக்கும் தலா ரூ.1,000 ஒதுக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம்-தனுஷ்கோடி(17.2 கி.மீ.) புதிய பாதை திட்டத்துக்கு ரூ.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.