தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய இபிஎஸ்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.


தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரேகட்டமாக தேர்தல், பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
கடந்த ஜனவரி 28ம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 4ம் தேதியோடு நிறைவடைந்தது. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்றது. வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி 7 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். திமுகவுக்கு கடும் சவால் தரும் வகையில் பிரசாரத்தை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...