‘கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டது உகந்ததல்ல’: பேரவைத் தலைவர்

சட்டப்பேரவைத் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டது உகந்ததா என அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
‘கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டது உகந்ததல்ல’: பேரவைத் தலைவர்

சட்டப்பேரவைத் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டது உகந்ததா என அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பிய நிலையில், தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை கூடியது.

பேரவைத் தலைவர் அப்பாவு பேசுகையில்,

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் அரசியல் சாசனப் பிரிவு 200-ன் கீழான அதிகாரத்தின் கீழ் ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரிய உயர்மட்டக்குழுவின் அறிக்கை ஏற்கத்தக்கதல்ல. காமலைக்கண்ணால் பார்ப்பது போல ஒருதலைப் பட்சமாக உள்ளது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
 
 
சட்டப்பேரவைத் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டது உகந்ததா என சமந்தப்பட்டவர்களுக்கு தெரிய வேண்டும்.
 
மேலும், சட்டப்பேரவையில் ஆளுநரைப் பற்றி தனியாக விமர்சனம் செய்யக்கூடாது எனவும் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com