தமிழக பேரவையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் தாக்கல்: தலைவர்கள் பேச்சு

தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீண்டும் தாக்கல் செய்தார்.
நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீண்டும் தாக்கல் செய்தார்.

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பிய நிலையில், தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை கூடியது.

இந்தக் கூட்டத்தில், நீட் விலக்கு மசோதாவை மீண்டும் தமிழக அரசுத் தரப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார்.

அப்போது மா.சுப்பிரமணியன் பேசுகையில்,

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜனின் உயர்நிலைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே மசோதா கொண்டுவரப்பட்டது என ஆளுநர் கூறியிருப்பது தவறானது. பொதுமக்களிடம் கருத்து கேட்ட பிறகே மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. நீட் மசோதா மீதான ஆளுநரின் மதிப்பீடுகள் அனைத்துமே தவறானவை.

அரசியமைப்பின்படி ஆளுநர் செயல்படாமல் தனிச்சையாக முடிவெடுத்து மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார். நீதிபதி ஏ.கே.ராஜனின் குழுவை ஆளுநர் அவமதித்துவிட்டார்.

வசதியனாவர்கள் பல முறை தேர்வு எழுதுவதற்கும், பயிற்சி மையத்தில் படிப்போருக்கும் சாதகமாக நீட் தேர்வு உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, ஒரு சட்டப்பேரவை சட்டத்தையே இயற்றக்கூடாது எனக் கூறுவது ஏற்புடையதல்ல எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸின் செல்வப்பெந்தகை, புரட்சி பாரத கட்சியின் ஜெகன் முர்த்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன்,  கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் ஈஸ்வரன்,   மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, மதிமுகவின் சதன் திருமலைக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் ராமசந்திரன், அதிமுகவின் விஜயபாஸ்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாலி ஆகியோர் ஆதரவு தெரிவித்து பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com