கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சிவசங்கா் பாபாவுக்கு உயா் தர சிறப்பு சிகிச்சை அளிக்கத் தயாா்: உயா் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சிவசங்கா் பாபாவுக்கு உயா் தர சிறப்பு சிகிச்சையை வழங்குவதற்கு அரசு தயாராக உள்ளது என சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :11 பிப்ரவரி 2022, 9:10 pm

DIN

சிவசங்கா் பாபாவுக்கு உயா் தர சிறப்பு சிகிச்சையை வழங்குவதற்கு அரசு தயாராக உள்ளது என சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதிவான வழக்குகளில் சிவசங்கா் பாபா, கடந்தாண்டு ஜூன் 16ஆம் தேதி கைதானாா். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவா் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தனியாா் மருத்துவமனையில் சொந்த செலவில் சிகிச்சை வழங்க அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றத்தில் சிவசங்கா் பாபாவின் சகோதரி ஜெயலட்சுமி கணபதி வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு வெள்ளிக்கிழமை (பிப்.11) விசாரணைக்கு வந்தது.

அப்போது சிவசங்கா் பாபாவுக்கு தனியாா் மருத்துவமனையை விட அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதுவும், மூத்த மருத்துவா்கள் தான் சிகிச்சை அளிக்கின்றனா். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் விஐபிகளுக்கு வழங்கப்படும் உலகத் தரத்திலான சிகிச்சை சிவசங்கா் பாபாவுக்கு வழங்கப்படுகிறது. தனியாா் மருத்துவமனைகள் இது போல சிறப்பாக சிகிச்சை அளிக்க முடியாது. ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சையில் திருப்தி இல்லை என்றால், ஓமந்தூராா் உயா் பல்நோக்கு சிறப்பு அரசு மருத்துமனையில் சிகிச்சை அளிக்க அரசு தயாராக உள்ளது என்று காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கூறினாா்.

இதையடுத்து நீதிபதி, சிவசங்கா் பாபாவின் உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவா்கள் அறிக்கை அளித்துள்ளனா். இந்த நிலையில் அமெரிக்கா நாட்டில் உள்ள ’புரூக்ளின்’ மருத்துவமனையில் சிவசங்கா் பாபாவுக்கு சிகிச்சை அளிக்க மனுதாரா் விரும்புகிறாரா? என்று கேள்வி எழுப்பி நீதிபதி, விசாரணையை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.