திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த சம்பவத்தில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை பொறுப்பிலிருந்து விடுவித்து பள்ளிக்கல்வித்துறை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான திருப்புதல் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான வினாத்தாள் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால், நிகழாண்டு அந்தந்த மாவட்ட அளவிலேயே வினாத்தாள்களை தயாா் செய்து கொள்ளுமாறு கல்வித் துறை அறிவுறுத்தியது.
இந்த நிலையில், திங்கள்கிழமை (பிப்.14) நடைபெறவிருந்த பிளஸ் 2 கணிதத் தோ்வு, பத்தாம் வகுப்பு அறிவியல் தோ்வுக்கான வினாத்தாள்கள் செய்யாறு பகுதியில் சனிக்கிழமை வெளியானது.
இது அந்தப் பகுதியில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு வாட்ஸ்-ஆப் வழியாக பகிரப்பட்டது. இதனால், கல்வித் துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் சனிக்கிழமை விசாரித்தனா். இதில், செய்யாறு பகுதியில் இயங்கும் ஒரு தனியாா் பள்ளியில் இருந்து வினாத்தாள் வெளியானது தெரிய வந்தது.
தொடர்ந்து தேர்வுத்துறை இயக்குநர் நேற்று காலை விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு நிர்வாக நலன்கருதி விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரியும் கிருஷ்ணபிரியாவை முழு கூடுதல் பொறுப்பு அலுவலராக நியமனம் செய்யப்படுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் லெஜண்ட் சரவணன்!

தோல்வியுற்ற அணிக்கு கோப்பை வழங்க தீர்ப்பளித்த ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பினால் சர்ச்சை!

ரஜினி Vs ஆதவ் அர்ஜுனா! செந்தில் பாலாஜி சொன்ன பதில்!

தமிழ்நாடு முழுவதும் டி-சேவா மையங்கள் தொடங்குவதற்கான பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

