ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!

விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு பிரச்னை: தெக்கலூரில் கஞ்சித் தொட்டி திறப்பால் பரபரப்பு

அவிநாசி அருகே தெக்கலூரில் கூலி உயர்வுப் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெக்கலூரில் கஞ்சித் தொட்டி திறந்த விசைத்தறியாளர்கள்

Updated On :

அவிநாசி: அவிநாசி அருகே தெக்கலூரில் கூலி உயர்வுப் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கூலி உயர்வுப் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் ஜனவரி 9-ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கிடையில் கடந்த வாரம் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பல்லடம் ரகத்துக்கு 15 சதவீதம், சோமனூர் ரகத்துக்கு 19 சதவீதம் என கூலி உயர்வு தருவதாகவும், 4 மாதங்கள் கழித்து மீண்டும் கூலி உயர்வு வழங்கப்படுமென இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. 

ஆனால் இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஜவுளி உற்பத்தியாளர்கள் மறுத்ததால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. 

இந்நிவையில், தெக்கலூர் பேருந்து நிறுத்தம் அருகே விசைத்தறி தொழிலாளர்கள், பாவு நூல் பிணைப்போர் உள்ளிட்டோர் விறகு அடுப்பு வைத்து கஞ்சித் தொட்டி திறந்துள்ளனர். இதனால் அவிநாசி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள், கஞ்சித் தொட்டி வைப்பதை தடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.