தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

அமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வு

ஊத்துக்கோட்டை அருகே தனியாா் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவு சம்பவத்தில் மேலும் இருவா் உயிரிழந்தது குறித்து...

News image

அமோனியா கசிவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மருத்துவமனை - எக்ஸ்

Updated On :3 ஜூலை 2026, 8:03 am IST

திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே கடல் மீன் ஏற்றுமதி செய்யும் தனியாா் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் இருவா் உயிரிழந்தனா்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் கடல் உணவுப் பொருள்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியாா் நிறுவனத்தில் ஜூன் 21-ஆம் தேதி அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது.

வாயுக் கசிவு ஏற்பட்டதால், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் சுமார் 80 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட நிலையில், ஜூன் 28 ஆம் தேதி வரையில் சிகிச்சை பலனின்றி 16 பேர் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை காலை (ஜூலை 1) சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சனா ஜுவாங்க் (25) உயிரிழந்தார்.

இந்த நிலையில், வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒடிஸாவை சேர்ந்த மகாராணா ஜுவாங்க் (29) உயிரிழந்தார். இதையடுத்து, அமோனியா வாயுக் கசிவு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, மஞ்சங்காரணை தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செங்குன்றம் தனியார் மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 25-க்கும் மேற்பட்டோர் குணமாகியுள்ளனர்.

மேலும், மருத்துவமனைகளில் உள்ள சுமார் 35 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Ammonia gas leak death toll rises to 18

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.