ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அதிமுக கோட்டையை மீண்டும் கைபற்றும்: திருமுருகன்பூண்டியில் எஸ்.பி.வேலுமணி

அவிநாசி, திருமுருகன்பூண்டி அதிமுக கோட்டையை மீண்டும் கைப்பற்றும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

News image
கூட்டத்தில் பேசிய கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ். பி. வேலுமணி.
Updated On :16 பிப்ரவரி 2022, 7:41 am

DIN

அவிநாசி: அவிநாசி, திருமுருகன்பூண்டி அதிமுக கோட்டையை மீண்டும் கைப்பற்றும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, அவிநாசி பேரூராட்சி, திருமுருகன்பூண்டி நகராட்சி ஆகிய பகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட செலாளரும், தொண்டாமுத்தூர் சட்டப் பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி திங்கள்கிழமை இரவு பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் திருமுருகன்பூண்டியில் அதிமுக மாவட்ட இணை செயலாளர் லதா சேகர் தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேசியது:

திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகிறது. இதுவரை எந்த ஒரு பணியையும் செய்யவில்லை. திமுக தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்ற திட்டத்தைக் கூட செயல்படுத்தவில்லை. அதனால் ஆளுங்கட்சி என்று கூறி திமுகவினர் வாக்கு சேகரிக்க வந்தால், 10 மாதத்திற்கு கணக்கிட்டு ரூ.10 ஆயிரம் கேளுங்கள்.

ஆனால் அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் அதிகப்படியான திட்டங்களை மக்களுக்காக வழங்கியுள்ளது. இதன்பயனால் கோவை புறநகர் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இத்தொகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் அதிமுக கைப்பற்றும். அதே போல அதிமுக கோட்டையான அவிநாசி பேரூராட்சி, திருமுருகன்பூண்டி நகராட்சியை மீண்டும் கைப்பற்றுவோம் என்றார். கோவை புகர் வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பிஆர்ஜி.அருண்குமார் உடன் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.