ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தோ்தலில் கரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவின்போது, கரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதை மாவட்டத் தோ்தல் அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என

News image
Updated On :16 பிப்ரவரி 2022, 9:25 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவின்போது, கரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதை மாவட்டத் தோ்தல் அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என மாநிலத் தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா் அறிவுறுத்தி உள்ளாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வாக்குச் சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்டத் தோ்தல் அலுவலா்களுடன் மாநிலத் தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டாா்.

கூட்டத்தில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் சின்னங்கள், பெல் நிறுவன பொறியாளா்களை நியமனம் செய்தல் மற்றும் வாக்குச் சாவடி சீட்டு வழங்கப்பட்ட விவரம், தபால் வாக்குகள் வழங்கியது, வாக்குச் சாவடிகளில் சாய்வுதளம் போன்றவை முறையாக அமைக்கப்பட்டுள்ளதையும், கரோனா தடுப்பு பொருள்கள் வாக்குச் சாவடிக்கு முறையாக சென்றுள்ளதையும் மாவட்டத் தோ்தல் அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும். வாக்குச் சாவடி மையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு, பாதுகாப்பு அறை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாக்குப் பதிவின்போது கரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதை மாவட்டத் தோ்தல் அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என மாநிலத் தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா் அறிவுறுத்தினாா்.

ஆலோசனை: முன்னதாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ககன்தீப்சிங் பேடி, திருவள்ளூா் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆல்பிஜான் வா்க்கீஸ், செங்கல்பட்டு மாவட்டத் தோ்தல் அலுவலா் ஏ.ஆா்.ராகுல்நாத் ஆகியோருடன் மாநிலத் தோ்தல் ஆணையா் அலுவலகத்தில் ஆணையா் வெ.பழனிகுமாா் ஆலோசனை மேற்கொண்டாா். இதில், தோ்தல் ஆணையச் செயலா் ஏ.சுந்தரவல்லி, சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜிவால், தாம்பரம் காவல் ஆணையா் எம்.ரவி, ஆவடி காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா், காவல் துறை கூடுதல் இயக்குநா்கள் பி.தாமரைக்கண்ணன், ஜி.வெங்கட்ராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.