‘நகர்ப்புற தேர்தலில் திமுகவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்’: எடப்பாடி பழனிசாமி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி பிரசாரத்தில் பேசினார்.


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி எம்எல்ஏ-வுக்கு கிருஷ்ணகிரியில் அதிமுகவினர் சார்பில் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி எம்எல்ஏ தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, அதிமுக தொண்டர்களிடையே பேசியது:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி, பேரூராட்சிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்களை, தொண்டர்கள் இரவு பகல் என பாராமல் வெற்றிக்காக பாடுபட வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ள திமுகவுக்கு நீங்களெல்லாம் தக்கப் பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.
அப்போது, மாவட்ட செயலாளர் கே. அசோக்குமார் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...