பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

உசிலம்பட்டி அருகே நான்காம் வகுப்பு மாணவன் உலக சாதனை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலத்திருமாணிக்கம் அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவன் ஒய்.மோனிஷ்ராஜ் என்பவர் ஜம்பிங் ஜாக்ஸ் என்ற பிரிவில்  கின்னஸ் உலக சாதனை புரிந்துள்ளார்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 7:59 am

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலத்திருமாணிக்கம் அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவன் ஒய்.மோனிஷ்ராஜ் என்பவர் ஜம்பிங் ஜாக்ஸ் என்ற பிரிவில்  கின்னஸ் உலக சாதனை புரிந்துள்ளார்.

இச்சாதனையை மதுரை டேக்வாண்டோ அகாடமி  கடந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதியன்று ஆன்லைன் மூலம் ஒருங்கிணைத்து நடத்தியது.  

வெற்றி பெற்றவர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டது. மதுரை மாவட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் சான்றிதழ் வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து பள்ளியின் தலைமையாசிரியர் பிரபு அலெக்ஸாண்டர் மற்றும் சக ஆசிரியர்களான கார்த்திக்பாண்டி, பாலமுருகன், ராஜேஷ்குமார் ஆகியோர் அம்மாணவனை பாராட்டியதோடு, பதக்கமும், பரிசும் வழங்கினர்.

இந்நிகழ்வில் பொதுமக்களும், பெற்றோரும் கலந்து கொண்டனர். அரசுப்பள்ளி மாணவன் கின்னஸ் உலக சாதனை புரிந்தது அவ்வூர் மக்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.