கூட்டணியிலதான் இருக்கோம்.. ஆனா இங்க இல்ல: இது குமரி ஃபார்மலா!
கூட்டணியிலதான் இருக்கோம்.. ஆனா இங்க இல்ல: இது குமரி ஃபார்மலா!

கூட்டணியிலதான் இருக்கோம்.. ஆனா இங்க இல்ல: இது குமரி ஃபார்மலா!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் திமுகவுடன் 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முதல் கூட்டணியிலிருக்கும் நிலையில்


சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் திமுகவுடன் 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முதல் கூட்டணியிலிருக்கும் நிலையில், அந்த கூட்டணியின் அடிப்படையிலேயே மாநிலம் முழுவதும் போட்டியிட்டாலும், அந்த ஃபார்முலா கன்னியாகுமரிக்கு பொருந்தவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும், பல இடங்களில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளின் சார்பில் சில வேட்பாளர்கள் தனியாகவும் களம்கண்டுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கன்னியாகுமரியில் பலம் அதிகம். எனவே, தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில், மேற்கு கன்னியாகுமரியின் பல்வேறு மாவட்டங்களில் அவர்கள் தனித்து களம்காண்கிறார்கள். இது குறித்து மாவட்ட செயலாளர் ஆர். செல்லசுவாமி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். இங்கு எங்களது பலத்துக்கு ஏற்ற வகையில் இடங்கள் ஒதுக்கப்படவில்லை. அதனால்தான் எங்களது தொண்டர்களுக்கு நியாயம் செய்யும் வகையில், தனியாகப் போட்டியிடுவது என்று முடிவெடுத்தோம். நாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம் என்றார்.

கொள்ளங்கோடு நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 32 இடங்களிலும் போட்டியிடுகிறோம். குழித்துறை நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளிலும் போட்டியிடுகிறோம் என்கிறார்.

பத்மநாபபுரம் நகராட்சியி, 7 வார்டுகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். 

இதுபோலவே, திமுகவில் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியும் குழித்துறையில் 19 வார்டுகளிலும், கொள்ளங்கோடுவில் 32 வார்டுகளிலும், பத்மநாபபுரத்தில் 11 வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எம். பினுலால் சிங் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், காங்கிரஸ் கட்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுகிறது. காரணம், இடங்கள் ஒதுக்கியதில் ஏற்பட்ட சிக்கலே. திமுகவைச் சேர்ந்தவர்கள் சில இடங்களை கூட்டணிக்குக் கொடுக்கவே மாட்டோம் என்கிறார்கள். ஒரு சில இடங்கள் எங்களுக்கு வேண்டும் எனறு காங்கிரஸ் நினைக்கிறது. அதனால்தான் சுயமாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம் என்கிறார்.

அதேவேளையில், திமுக கட்சியினரோ நிச்சயமாக நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் அனைத்து நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com