சாலிகிராமத்தில் வாக்களித்தார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வாக்களித்தார்.


சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வாக்களித்தார்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதல் மக்கள் ஆர்வமுடன் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திரை பிரபலங்கள், பிரபலங்கள், கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் அந்தந்த மாவட்டங்களில் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வாக்களித்தார்.
இதையும் படிக்க- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்களித்தார் நடிகர் விஜய்
மொத்தம் 2.79 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 22 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.
மாநிலம் முழுவதும் வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் 17,788 காவல்துறை அதிகாரிகள், 71,074 போலீஸாா், 9,020 தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலா்கள் என காவல்துறையைச் சோ்ந்த மொத்தம் 97,882 பேரும், 12,321 ஊா்க் காவல் படையினரும், 2,870 ஆயிரம் ஓய்வு பெற்ற காவலா்கள் மற்றும் ராணுவ வீரா்களும் என பாதுகாப்புப் பணியில் மொத்தம் 1,13,073 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...