

ஒற்றை மொழி ஆதிக்கமின்றி சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
சர்வதேச தாய்மொழி நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
உலகத் தாய்மொழி நாளில், தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
இதையும் படிக்க | ஆந்திர தொழில்துறை அமைச்சர் கௌதம் ரெட்டி மாரடைப்பால் மரணம்
அவர்களது தியாகத்தில் இருந்து பெறும் உணர்வெழுச்சி கொண்டு, ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி - அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.