ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்

விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 21 வார்டுகள், கல்லிடைக்குறிச்சிப் பேரூராட்சியில் 15 வார்டுகள், மணிமுத்தாறு பேரூராட்சியில் 15 வார்டுகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.  

News image
அம்பாசமுத்திரம் நகராட்சியில் வாக்கு எண்ணக்கை நடைபெறுவதையடுத்து தபால் வாக்குகள் பிரிக்கப்படுகின்றன
Updated On :22 பிப்ரவரி 2022, 3:17 am

DIN

அம்பாசமுத்திரம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சியில் 21 வார்டுகள், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 21 வார்டுகள், கல்லிடைக்குறிச்சிப் பேரூராட்சியில் 15 வார்டுகள், மணிமுத்தாறு பேரூராட்சியில் 15 வார்டுகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.  

அம்பாசமுத்திரம் அ.வே.றாம.வே. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையடுத்து காலை 7 மணிக்கு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தினுள் அனுமதிக்கப்பட்டனர். 

காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் உள்ள பெட்டி திறக்கப்பட்டு தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டன. தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படவிருக்கிறது.

காவலர்கள் மற்றும் ஊர்க்காவல்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.