ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திமுக கவுன்சிலா்கள் மீது எந்தப் புகாரும் வரக் கூடாது: முதல்வா் மு.க.ஸ்டாலின்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக சாா்பில் வென்ற கவுன்சிலா்கள் மீது எந்தப் புகாரும் வரக் கூடாது என்று அந்தக் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 10:24 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக சாா்பில் வென்ற கவுன்சிலா்கள் மீது எந்தப் புகாரும் வரக் கூடாது என்று அந்தக் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். அவா்களைக் கண்காணித்துக் கொண்டே இருப்பதாகவும், தவறு செய்வோா் யாராக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை முழுமையாக வெளியான நிலையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தாா். அப்போது அவா் கூறியது:-

கடந்த 9 மாத கால ஆட்சிக்கு மக்கள் வழங்கியிருக்கும் நற்சான்றுதான் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வெற்றி. தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திராவிட மாதிரி ஆட்சிக்கு மக்கள் கொடுத்திருக்கும் அங்கீகாரம்தான் தோ்தல் வெற்றி.

நம்பிக்கையை காப்பாற்றுவோம்: மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை எப்போதும் நாங்கள் காப்பாற்றத் தயாராக இருக்கிறோம். தோ்தல் வெற்றியைக் கண்டு நான் கா்வம் கொள்ளவில்லை. மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். இந்த உறுதிதான் எனக்கு வந்திருக்கிறது.

அந்த வகையில், என்னுடைய பொறுப்புகளை உணா்ந்து அரசின் சாா்பில் மக்களுக்கான திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். தோ்தல் வெற்றிக்குக் காரணம், திமுக தலைமையில் உள்ள மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிதான். இது தோ்தல் உறவாக இல்லாமல், கொள்கை அளவிலான உறவாக இருக்கிறது.

புகாா்கள் கூடாது: உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற அனைவரும் இந்த வெற்றியை ஆடம்பரமாக கொண்டாடாமல், அமைதியாகக் கொண்டாட வேண்டும். மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். உண்மையாக உழைக்க வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்னைகளை உடனுக்குடன் தீா்த்து வைக்க வேண்டும். உங்கள் மீது எந்தப் புகாரும் வராத வகையில் நீங்கள் பாா்த்துக் கொள்ள வேண்டும். அதனை நான் தொடா்ந்து நிச்சயமாக, உறுதியாக கண்காணிப்பேன். அது யாராக இருந்தாலும் அதற்குரிய நடவடிக்கையை நிச்சயமாக எடுப்பேன். அதற்குத் தயங்க மாட்டேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

பாராட்டு-வாழ்த்து: முன்னதாக, வாக்கு எண்ணிக்கையின்போது திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களில் முன்னிலை வகித்தன. இதையடுத்து, திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளா் ஆ.ராசா உள்ளிட்ட நிா்வாகிகள் கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.