திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கூடலூரில் குடும்பத்தகராறு: கணவன், மனைவி தற்கொலை 

தேனி மாவட்டம் கூடலூரில் குடும்பத்தகராறு காரணமாக கணவன், மனைவி செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

News image
கூடலூரில் குடும்பத்தகராறு: கணவன், மனைவி தற்கொலை 
Updated On :22 பிப்ரவரி 2022, 4:36 am

DIN


கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் குடும்பத்தகராறு காரணமாக கணவன், மனைவி செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

தேனி மாவட்டம் கூடலூர் நோட்டக்கார புளியமரத்து தெருவை சேர்ந்தவர் குபேந்திரன்(60), விவசாயி, இவரது  மனைவி சுந்தரி (55). இவர்களுக்கு திருமணமாகி தினேஷ், தியாகு என்ற 2 மகன்கள் தனியாக வசித்து வருகின்றனர்.

குபேந்திரன் அவர் மனைவியும் தனியாக வசித்து வந்தனர், மகன்கள் தனியாக வசித்ததாலும், தம்பதி போதிய வருமானம் இன்றியும்  சிரமப்பட்டு வாழ்ந்து வந்தனர். 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் அருகே உள்ளவர்கள் கதவை திறந்து உள்ளே பார்த்தபோது கணவன், மனைவி இருவரும் மயங்கி கிடந்தனர்.  இருவரையும் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் குபேந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர், சிறிது நேரம் கழித்து சிகிச்சை பலனின்றி சுந்தரியும் பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவல் கிடைத்ததும் கூடலூர் வடக்கு காவல் நிலைய காவலர்கள்  கணவன், மனைவி இருவரது உடல்களை கம்பம் அரசு  மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனைக்கு ஒப்படைத்து மேல் விசாரணை செய்து வருகிறார்கள்.

கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.