ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

ஈரோடு: 10ல் 9 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது

ஈரோடு மாவட்டத்தில் 10ல் 9 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. 

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 6:58 am

ஈரோடு மாவட்டத்தில் 10ல் 9 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் 42 பேரூராட்சிகள் உள்ளன. பகல் 12 மணி வரை 10 பேரூராட்சிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 9 பேரூராட்சிகளை திமுக கூட்டணி  கைப்பற்றியது.

முடிவுகள் அறிவிக்கப்பட்ட பேரூராட்சிகள் விவரம்:

அறச்சலூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக 11 வார்டுகளில் வெற்றி பெற்று பேரூராட்சியை கைப்பற்றியது.

ஊஞ்சலூர் பேரூராட்சியில் 12 வார்டுகளில் 6 வார்டுகளை திமுக கைப்பற்றியது.

நம்பியூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 9 வார்டுகளை திமுகவும், 3 வார்டுகளை காங்கிரசும் கைப்பற்றின. இங்கு அதிமுக 2, பா.ஜனதா 1 இடத்தையும் பிடித்தன.

பாசூர் பேரூராட்சியில் 12 வார்டுகளில் 8 வார்டுகளை திமுகவும் காங்கிரஸ் ஒரு இடத்தையும் பிடித்தன.

பெரிய கொடிவேரி 15 வார்டுகளில் திமுக 12 வார்டுகளையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் பிடித்தன. அதிமுக 2 வார்டுகளை பிடித்தது.

லக்கம்பட்டி பேரூராட்சியில் அதிமுக 12 இடங்களையும், திமுக 3 இடங்களையும் பிடித்தன.

பவானிசாகர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக 13, இந்திய கம்யூனிஸ்டு ஒரு வார்டையும் சுயேச்சை ஒரு இடத்தையும் கைப்பற்றின.

கருமாண்டிசெல்லிபாளையம் பாளையத்தில் 18 வார்டுகளில் திமுக 10 வார்டுகளை கைப்பற்றியது. அதிமுக 4 வார்டுகளையும், சுயேச்சை 3 வார்டுகளையும் பா.ஜனதா ஒரு இடத்தையும் கைப்பற்றின.

பெருந்துறை 15 வார்டுகளில் திமுக 10 வார்டுகளை கைப்பற்றியது. காங்கிரஸ் ஒரு இடத்தையும், அ.திமுக 4 வார்டுகளையும் பிடித்தன.

அந்தியூர் 18 வார்டுகளில் திமுக 13 இடங்களை பிடித்தது. அதிமுக 2 வார்டுகளையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும், இந்திய கம்யூனிஸ்டு ஒரு இடம் மற்றும் ஒரு இடத்தை சுயேச்சையும் கைப்பற்றின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.