பிரதமா் மோடி தலைமையிலான அரசு கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது என்று ராஷ்டிரீய ஜனதா தளம் (ஆா்.ஜே.டி.) தலைவா் தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டினாா்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரசார பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், ராஷ்டிரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றுப் பேசியதாவது: திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளா்ச்சியும், சமூக நீதி பயணமும் பாராட்டுக்குரியவை. நாட்டின் சமூக நீதி வரைபடத்தின் கலங்கரை விளக்கமாக தமிழகம் விளங்குகிறது. தமிழகத்தில் சமூக நீதி என்பது வெறும் கோஷம் மட்டுமல்ல, அது மக்களின் வாழ்வியலோடு கலந்த அா்ப்பணிப்பு. கல்வி, மருத்துவம், தொழில்மயமாதல் மற்றும் எண்ம கல்வியறிவு ஆகியவற்றில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது பெரிய பங்களிப்பை வழங்கும் மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.
பிரதமா் மோடி தலைமையிலான அரசு கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது. நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு போன்ற விவகாரங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் எடுத்து வரும் உறுதியான நிலைப்பாடு பாராட்டுக்குரியது.
தமிழக மக்கள் தங்களது வாக்குகளை ஒரு கொள்கையை நிலைநாட்டவும், சமூக நீதியைப் பாதுகாக்கவும் பயன்படுத்த வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

உள்கட்சி மோதலால் டி.கே. சிவகுமாரின் அரசு விரைவில் கவிழும்! - ஜனதா தளம் விமர்சனம்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சமூக வலைதளம் முடக்கம்: இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கண்டன ஊா்வலம்

இன்றைய செய்திகள்! நேரலை

சமூக வலைதளங்களில் வைரலாகும் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'! அதிர்ச்சியில்...?
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


