ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சேலம்: வாக்கு எண்ணிக்கை மையங்களில் குவிந்த அரசியல் கட்சியினர்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தமிழகம் முழுவதும் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையையொட்டி, தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

News image
சேலம்: வாக்கு எண்ணிக்கை மையங்களில் குவிந்த அரசியல் கட்சியினர்
Updated On :22 பிப்ரவரி 2022, 3:12 am

DIN


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தமிழகம் முழுவதும் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையையொட்டி, தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், சேலம் அம்மாபேட்டை சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி முன்பு செவ்வாய்க்கிழமை  காலை முதலே, பல்வேறு கட்சி முகவர்கள் திரண்டிருந்தனர்.

Story image

சேலம் அம்மாபேட்டை சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணும் மையத்தில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் தொடங்கிய நிலையில், நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தபால் ஓட்டு எண்ணுவதற்காக பெட்டியை ஊழியர்கள் எடுத்துச் சென்றனர்.

Story image

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ளே செல்லும் பல்வேறு கட்சி முகவர்களிடம் தடை செய்யப்பட்ட பொருள்கள் ஏதேனும் கொண்டு செல்கிறார்களா என்று சோதனை செய்து காவலர்கள் அனுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.