சமயபுரம், கண்ணனூர் பேரூராட்சி: முதல் முறையாக திமுக கைப்பற்றியது
திருச்சி மாவட்டம் சமயபுரம், கண்ணனூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் முதல் முறையாக திமுக கைப்பற்றியது.


திருச்சி மாவட்டம் சமயபுரம், கண்ணனூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் பதிவான வாக்குகள் கொணலை சூர்யா பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகின்றன. இப்பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டுள்ள நிலையில் முதல் 13 வார்டுகளுக்கான முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் திமுக கூட்டணி 9 வார்டுகளிலும், அதிமுக, சுயேச்சை தலா 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 15 வார்டுகள் கொண்ட இப்பேரூராட்சியில் 8 வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றி தலைவர் பதவியை உறுதிப்படுத்தியுள்ளது.
1ஆவது வார்டில் திமுக( பிரதீப்), 2 ஆவது வார்டு(சத்தியா) அதிமுகவும், 3வது வார்டு(எஸ்.ஆர்.மணிகண்டன்) அதிமுக, 4-வது வார்டு(ரா.கலைவாணி) திமுக, 5ஆவது வார்டு (பா.சாந்தி) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 6 வது வார்டு (அம்சவள்ளி) திமுக, 7ஆவது வார்டு (பாக்யா) திமுக, 8 ஆவது வார்டு ஜெயலட்சுமி) திமுக, 9ஆவது வார்டு(அழகேசன்) சுயேச்சை, 10ஆவது வார்டு(ப.சரவணன்) திமுக, 11ஆவது வார்டு (ச.கனிமொழி) சுயேச்சை, 12ஆவது வார்டு (பிரவீன்குமார்), திமுக, 13ஆவது வார்டு (பா.சங்கீதா) திமுக வெற்றி பெற்றுள்ளது. இப்பேரூராட்சியை திமுக முதல் முறையாக கைப்பற்றி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...