ஈரோடு மாவட்டத்தில் கோபி, சத்தியமங்கலம், பவானி உள்ளிட்ட நான்கு நகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பவானி, கோபி, சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி ஆகிய நான்கு நகராட்சிகளில் தேர்தல் நடந்தது. இதில், கோபி தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக மூன்று முறை அதிமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், நான்காவது முறையும் இந்த வெற்றி தொடருமா என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது.
திமுக முன்னணி நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனின் சொந்த தொகுதி என்பதால், இங்கு திமுக - அதிமுக இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால், தேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 30 வார்டுகளில், திமுக 14 வார்டுகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றதன் மூலம், கோபி நகராட்சி திமுக வசமாகியுள்ளது. அதிமுக 13 வார்டுகளிலும், சுயேட்சை ஒரு வார்டிலும் இங்கு வெற்றி பெற்றுள்ளனர்.
இதேபோல், புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில், 11 வார்டுகளில் திமுகவும், 2 வார்டுகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. நான்கு இடங்களை சுயேட்சைகள் கைப்பற்றியுள்ள நிலையில், அதிமுக ஒரு வார்டினை மட்டும் கைப்பற்றியுள்ளது. இங்கு 4 வார்டுகளில் அதிமுக வைப்புத்தொகையை இழந்துள்ளது.
சத்தியமங்கலம் நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில், 18 வார்டுகளில் திமுகவும், 4 வார்டுகளில் அதிமுகவும், பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் தலா இரு வார்டுகளிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
பவானி நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில், திமுக 19 வார்டுகளிலும், அதிமுக 5 வார்டுகளிலும், கம்யூனிஸ்ட் 2 வார்டுகளிலும், சுயேட்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் ஈரோட்டில் தேர்தல் நடந்த நான்கு நகராட்சிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை: திமுக வேட்பாளா் கடற்கரைராஜ் உறுதி
கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்
ஒரேநாளில் ரூ.17.93 லட்சம் ரொக்கம் பறிமுதல்

புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கிறாா் முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.கே. சிங்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


