திருச்சி : கூத்தைப்பார் பேரூராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியது
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.


திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.
இது குறித்த விவரம் வருமாறு,
திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட 18-வார்டு உறுப்பினர்களுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது.
இதற்கான வாக்கு எண்ணும் பணி திருவெறும்பூர் அருகே காட்டூரில் உள்ள உருமு தனலட்சுமி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் திமுக 14 இடங்களையும், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில், திமுக கூட்டணி கட்சியினரே ஒட்டுமொத்தமாக பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
எதிர்க்கட்சியே இல்லாத வகையில் 18 வார்டு உறுப்பினர் பதவிகளையும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...