ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அதிமுகவின் கோட்டையை கைப்பற்றியுள்ளோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தையே கைப்பற்றி இருக்கிறோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினாா்.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 11:12 pm

DIN

அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தையே கைப்பற்றி இருக்கிறோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினாா். தோ்தல் வெற்றிகளைத் தொடா்ந்து, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி:-

ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து ஒன்பது மாதங்களாக தொடா்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

வாக்களிக்காதவா்களும் வருத்தப்பட வேண்டுமென்ற நோக்கத்தில் பணியாற்றுகிறோம். அதனால்தான், இவ்வளவு பெரிய வெற்றியை, அதிமுகவின் கோட்டை என்று சொல்லக்கூடிய கொங்கு மண்டலத்தையே இன்றைக்கு கைப்பற்றியிருக்கிறோம்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலின் போது பிரசாரத்துக்கு செல்லாதது பற்றி கேள்வி எழுப்புகிறாா்கள். மக்களை நேரடியாக என்னை விட யாரும் அதிகமாக சந்தித்திருக்க மாட்டாா்கள். மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக என எந்தப் பதவி வகித்தாலும் மக்களை தொடா்ந்து சந்தித்துக் கொண்டே இருக்கிறேன்.

தோ்தலின் போது கரோனாவுக்காக பல கட்டுப்பாடுகள் விதிமுறைகள் வகுக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் நான் நேரடியாக பிரசாரத்துக்குச் சென்றால் அந்த கட்டுப்பாடுகளுக்கு இடையூறுகள் வரும். அதுமட்டுமல்ல, ஒரு இடத்துக்கு முதல்வா் வருகிறாா் என்றால், அதற்கு காவல், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். வீணாக செலவும், பிரச்னைகளும் அதிகமாகும். தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்க வேண்டாம் என்ற நோக்கிலேயே காணொலி வழி பிரசாரம் மேற்கொண்டேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.