கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கீழையூர்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாள் விழா அனுசரிப்பு

மறைந்த முன்னாள் தமிழக  முதல்வர் ஜெ.ஜெயலலிதா-வின் 74-வது பிறந்த நாள் விழா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  கீழையூர் மேற்கு ஒன்றியம் சார்பில் அனுசரிக்கப்பட்டது.

News image

கீழையூர் கடைத்தெரு பகுதியில் நடைபெற்ற மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் அனுசரிப்பு நிகழ்வில் பங்கேற்றோர்.

Updated On :24 பிப்ரவரி 2022, 5:50 am

மறைந்த முன்னாள் தமிழக  முதல்வர் ஜெ.ஜெயலலிதா-வின் 74-வது பிறந்த நாள் விழா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  கீழையூர் மேற்கு ஒன்றியம் சார்பில் அனுசரிக்கப்பட்டது.

திருக்குவளை கடைத்தெரு பகுதியில் நடைபெற்ற மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் அனுசரிப்பு நிகழ்வில் பங்கேற்றோர்.

திருக்குவளை கடைத்தெரு பகுதியில் நடைபெற்ற மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் அனுசரிப்பு நிகழ்வில் பங்கேற்றோர்.

கீழையூர் கடைத்தெரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா  திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கட்சிக் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.

மேலப்பிடாகை கடைத்தெரு பகுதியில் நடைபெற்ற மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் அனுசரிப்பு நிகழ்வில் பங்கேற்றோர்.

மேலப்பிடாகை கடைத்தெரு பகுதியில் நடைபெற்ற மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் அனுசரிப்பு நிகழ்வில் பங்கேற்றோர்.

இந்நிகழ்விற்கு எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர் எஸ். பால்ராஜ் தலைமை வகித்தார். கீழையூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் பாலை.கே.எஸ்.எஸ். செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட அம்மா பேரவைத் தலைவர் ஆர்.எஸ். சதீஷ், விவசாயப் பிரிவு ஒன்றியத் தலைவர் எல். சுப்பிரமணியன், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் என். முருகானந்தம், அண்ணா தொழிற்சங்க ஒன்றியச் செயலாளர் வீ. திருஞானசம்பந்தம், ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் பீ. அந்தோணி ராஜ், மகளிரணி ஒன்றியத் தலைவர் டெல்பி மார்க்ரெட் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதேபோல் மேலப்பிடாகை மற்றும் திருக்குவளை கடைத்தெரு பகுதிகளிலும் ஜெயலலிதா பிறந்த நாள் விழா அனுசரிக்கப்பட்டது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.