கடலூர்: புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது

கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சி 4 ஆவது வார்டு வாக்குச்சாவடி எண் 4-ஏவி-இல் மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 
கடலூர்: புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது
Published on
Updated on
1 min read


கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சி 4 ஆவது வார்டு வாக்குச்சாவடி எண் 4-இல் மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

கடலூர் மாவட்டத்தில், கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளுக்கு 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் புவனகிரி பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கான பதவிகளுக்கு 78 பேர் போட்டியிட்டனர். 

வாக்குப்பதிவு முடிந்ததும் அன்று இரவு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையமான புவனகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அப்போது 4 ஆவது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 4-இல் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதானது. இதனால் அந்த வார்டில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து 4 ஆவது வார்டு திருவள்ளூர் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி எண் 4-இல் மட்டும் இன்று (பிப்.24) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

அதன்படி, இன்று வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர். 

மாலை 5 மணி வரை வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்யலாம். 5-6 மணி வரை கரோனா பாதித்தவர்களும் வாக்குப்பதிவு செய்யலாம்.

6 மணிக்கு வாக்குப்பதிவு மையத்திலேயே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com