

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சேர்ந்த மாணவர்கள் உக்ரைனில் போர் காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சேர்ந்த ஆதிசிவன் கிளர்க் இவரது மகன் கபில்நத் மற்றும் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் பாண்டியன் மகன் தீபன் சக்ரவர்த்தி இருவரும் உக்ரைன் நாட்டிலுள்ள கியூ மற்றும் புஷ்குரோத் பகுதியில் கல்லூரி இறுதி ஆண்டு படித்து வருகின்றனர். இந்நிலையில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து குண்டு மழை பொழிந்து வருகிறது.
இந்நிலையில் மாணவர்கள் இருவரும் தாயகம் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக ஊர் திரும்ப வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.