
கோவில்பட்டி: வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளை முன்னிட்டு, கயத்தாரில் உள்ள அவரது உருவச் சிலைக்கு கடம்பூர் செ. ராஜு எம்எல்ஏ,
திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 263 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ.ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும், வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நினைவு ஸ்தூபியின் கீழ் வைக்கப்பட்டிருந்த கட்டபொம்மன் உருவப்படத்திற்கும் கடம்பூர் செ.ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், கயத்தாறு வட்டாட்சியர் பேச்சிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா.
அப்போது, மாவட்ட ஊராட்சி தலைவி சத்யா, அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பழனிசாமி, விளாத்திகுளம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் வினோபாஜி, அன்புராஜ், நகரச் செயலாளர் விஜயபாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் கவியரசன் உள்பட பலர் உடனிருந்தனர்.
இதுபோல, கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன், கயத்தாறு வட்டாட்சியர் பேச்சிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிக்க |சிவகங்கையில் ராணி வேலுநாச்சியாரின் 292ஆவது பிறந்த நாள் விழா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.