வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சென்னை மக்களே எச்சரிக்கை: கரோனா நோயாளிகள் 2 நாளில் 2 மடங்கு அதிகரிப்பு

சென்னையில் ஜனவரி 1ஆம் தேதி 2,400 என்ற அளவிலிருந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, ஜனவரி 4ஆம் தேதியன்று 4,259 ஆக அதிகரித்துள்ளது.

News image
சென்னை மக்களே எச்சரிக்கை: கரோனா நோயாளிகள் 2 நாளில் 2 மடங்கு அதிகரிப்பு
Updated On :4 ஜனவரி 2022, 9:12 am

DIN


சென்னை: சென்னையில் ஜனவரி 1ஆம் தேதி 2,400 என்ற அளவிலிருந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, ஜனவரி 4ஆம் தேதியன்று 4,259 ஆக அதிகரித்துள்ளது.

அதுபோல, நாள்தோறும் கரோனா உறுதி செய்யப்படும் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. ஜனவரி ஒன்றாம் தேதி 682 ஆக இருந்தது, ஜனவரி 3ஆம் தேதி 876 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் டிசம்பர் மத்தியில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 120 என்ற அளவில் இருந்த நிலையில் டிசம்பர் 31ஆம் தேதியன்று இது 589 ஆக படிப்படியாக அதிகரித்து வருகிறது.

சென்னையில் ஜனவரி 4ஆம் தேதி காலை நிலவரப்படி, ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5.65 லட்சமாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 5.52 லட்சமாகவும், கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4,259 ஆகவும் உள்ளது. இதுவரை கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8,656 ஆக உள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 538 கரோனா நோயாளிகளும், அடையாறு பகுதியில் 528 பேரும், கோடம்பாக்கத்தில் 520 பேரும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.