திருவான்மியூா் ரயில் நிலைய கொள்ளை சம்பவம்: காவல்துறை விளக்கம்

திருவான்மியூா் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை அதிகாலையில் ரூ.1.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறை டிஐஜி ஜெயகெளரி விளக்கம் அளித்துள்ளார்.
ரயில்வே காவல்துறை டிஐஜி ஜெயகெளரி
ரயில்வே காவல்துறை டிஐஜி ஜெயகெளரி
Published on
Updated on
1 min read


திருவான்மியூா் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை அதிகாலையில் ரூ.1.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறை டிஐஜி ஜெயகெளரி விளக்கம் அளித்துள்ளார்.

திருவான்மியூா் ரயில்நிலையத்தில் திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு டிக்கெட் எடுப்பதற்காக, தரை தளத்தில் உள்ள கவுன்ட்டரில் காத்திருந்தனா். வெகு நேரமாகியும் டிக்கெட் கவுன்ட்டா் திறக்கப்படாததால், ரயில்வே காவல்துறைக்கு தகவல் கொடுத்தனா்.

ரயில்வே காவலர்கள் உள்ளேச் சென்று பாா்த்தபோது, டிக்கெட் கவுன்ட்டா் ஊழியா் டீக்காராம் மீனா (28), கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில் கிடந்தாா். ஊழியரை விடுவித்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முகமூடி அணிந்த 3 மா்ம நபா்கள் துப்பாக்கி முனையில் கட்டிப்போட்டு, பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் கொள்ளைபோனதாக, ரயில்வே ஊழியர் நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் டிஐஜி ஜெயகெளரி கூறியதாவது:

“திருவான்மியூர் ரயில் நிலையத்தில் பணம் கொள்ளை போனத் தகவல் கிடைத்தவுடன் ரயில்வே டிஜிபி உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ரயில் நிலைய நுழைவு வாயில் மற்றும் அருகாமையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த பின், ஊழியர் டீக்காராமை விசாரித்தோம். இதில், கொள்ளை போனதாக அவர் நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து கடனில் இருந்ததால், இந்த கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். திங்கள்கிழமை அதிகாலை அவரது மனைவியை வரவழைத்து கவுண்ட்டரில் இருந்த ரூ. 1.32 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.

இந்த பணம் அவரது வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம்.

ரயில் நிலையத்திற்குள் சிசிடிவி கேமிராக்கள் பொருத்துவது குறித்து ரயில்வே துறையிடம் தெரிவிப்போம்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com