மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

அண்ணாசாலையில் நடந்து சென்று முகக்கவசம் வழங்கிய  ஸ்டாலின்

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Published on


சென்னை: நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், சென்னை அண்ணாசாலைக்கு வாகனத்தில் வந்து கொண்டிருந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திடீரென வாகனத்திலிருந்து இறங்கி, அண்ணசாலையில் மக்கள் அனைவரும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுகிறார்களா? கரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றதா என்பதை நேரில் ஆய்வு செய்தார்.

அண்ணாசாலையின் முக்கிய கடைப்பகுதியில் நடந்து சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முகக்கவசம் அணியாமல் வந்த மக்களை ஏன் முகக்கவசம் அணியவில்லை என்று கேட்டு, தனது கையிலிருந்த முகக்கவசங்களை வழங்கினார்.

கடைகளிலும், கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து, வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com