வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

விமான நிலையம் முதல் வண்டலூர் வரை மெட்ரோ? பேரவையில் முதல்வர் பதில்

சென்னை விமான நிலையத்திலிருந்து வண்டலூர் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

News image
Updated On :6 ஜனவரி 2022, 5:04 am

DIN

சென்னை விமான நிலையத்திலிருந்து வண்டலூர் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் நேற்று தொடங்கிய நிலையில் நாளை வரை நடைபெறவுள்ளன.

இன்று காலை கூட்டம் கூடியவுடன், கடந்த காலங்களில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முப்படைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 பேர், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து கேள்வி நேரம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. சென்னை விமான நிலையத்திலிருந்து வண்டலூர் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுமா என்ற முதல் கேள்வியை பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி கேட்டார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “விமான நிலையத்திலிருந்து வண்டலூர் கிளம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.