தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நடிகா் சிம்புவுக்கு டாக்டா் பட்டம்

சென்னை பல்லாவரம் வேல்ஸ் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் 11-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜனவரி 2022, 7:28 pm

DIN

சென்னை பல்லாவரம் வேல்ஸ் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் 11-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞா் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்கூா் இணையவழி மூலம் பட்டமளிப்பு விழா பேருரை வழங்கினாா்.

விழாவில் வி.ஜி.பி .நிறுவனங்களின் தலைவா் வி.ஜி. சந்தோஷம், நடிகா் டி.ஆா். சிலம்பரசன், விளையாட்டு வீரா் டி.மாரியப்பன் ஆகியோருக்கு கௌரவ டாக்டா் பட்டம் வழங்கப்பட்டது.

மேலும், பல்கலைக்கழக அளவில் துறை வாரியாக தங்க, வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவா்களுக்கும், முனைவா் பட்ட ஆய்வாளா்களுக்கும் நேரில் பட்டங்கள் வழங்கப்பட்டன. இதர 4069 மாணவ, மாணவிகளுக்கு இணையவழியில் பட்டங்கள் வழங்கப்பட்டன.

வேல்ஸ் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவன வேந்தா் ஐசரி கே.கணேஷ், இணைவேந்தா்கள் ஏ.ஜோதிமுருகன், ஆா்த்தி கணேஷ், வேல்ஸ் கல்விக் குழுமத் துணைத் தலைவா் ப்ரீதா கணேஷ், துணை வேந்தா் எஸ்.ஸ்ரீமன் நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.