நீடாமங்கலம்: சிக்னல் கிடைத்தும் சரக்கு ரயில் நின்றதால் பரபரப்பு

சிக்னல் கிடைத்தும் நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் திடீரென நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீடாமங்கலம் ரயில் நிலைய வளாகத்தில் ரயில் செல்ல சிக்னல் கிடைத்தும் திடீரென நிறுத்தப்பட்ட சரக்கு ரயில்.
நீடாமங்கலம் ரயில் நிலைய வளாகத்தில் ரயில் செல்ல சிக்னல் கிடைத்தும் திடீரென நிறுத்தப்பட்ட சரக்கு ரயில்.
Published on
Updated on
1 min read

நீடாமங்கலம்: சிக்னல் கிடைத்தும் நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் திடீரென நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீடாமங்கலம் ரயில்வேகேட் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.55 மணியளவில் மூடப்பட்டது. தஞ்சாவூர் பகுதியிலிருந்து திருவாரூர் நோக்கி ரயில் செல்ல சிக்னல் பச்சை விளக்கும் எரிந்தது. தஞ்சாவூர் பகுதியிலிருந்து திருவாரூர் நோக்கி செல்லும் சரக்குரயில் வந்த வேகத்தில் சிக்னல் பகுதிக்கு முன்பு ரயில் நிலைய நடைமேடை பகுதியில் திடீரென நின்றது. சரக்குரயில் பெட்டிகள் ஒன்றின் சக்கரத்தில் பிரேக்பட்டை உரசி தீப்பொறி வந்ததாகவும் கூறி அனைத்து பெட்டிகளின் சக்கரங்களையும் எஞ்ஜின் டிரைவர்,  சரக்கு ரயில்கார்டு, நீடாமங்கலம் ரயில் நிலைய ஊழியர்கள் சக்கரங்களின் அருகில் சென்று விளக்கு அடித்துப் பார்த்தனர்.

நான்கு மற்றும் 11 வது ரயில் பெட்டிகளில் இதுபோன்று நிகழ்ந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து சரக்குரயில் செல்ல தடைகள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்த பின் சரக்குரயில் புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தால் அதிகாலையில் ரயில்நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நெடுஞ்சாலை போக்குவரத்து சுமார்  20 நிமிடங்கள் தாமதமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com