கண்ணைக் கசக்காமல், புகையில்லா போகியைக் கொண்டாட சில வழிகள்

போகிப் பண்டிகை என்றாலே, ஒவ்வொரு ஆண்டும், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை பறைசாற்றும் வகையில், வீட்டில் பயன்படுத்தி, தூக்கி எறியும் பொருள்களை தீயிட்டுக் கொளுத்தி, அதனைக் கொண்டாடுவதுதான்.
கண்ணைக் கசக்காமல், புகையில்லா போகியைக் கொண்டாட சில வழிகள்
கண்ணைக் கசக்காமல், புகையில்லா போகியைக் கொண்டாட சில வழிகள்


புது தில்லி: போகிப் பண்டிகை என்றாலே, ஒவ்வொரு ஆண்டும், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை பறைசாற்றும் வகையில், வீட்டில் பயன்படுத்தி, தூக்கி எறியும் பொருள்களை தீயிட்டுக் கொளுத்தி, அதனைக் கொண்டாடுவதுதான்.

சில கிராமங்களில், ஒன்றாக எல்லோரும் ஒரேயிடத்தில் அனைத்துப் பொருள்களையும் தீயிட்டுக் கொளுத்தி, அதனை சுற்றி ஆடியும், பாடியும், மேளமடித்தும் உற்சாகத்தை வெளிப்படுத்துவார்கள்.

நல்ல முறையில் அறுவடை முடிந்திருக்கும் நேரமென்பதாலும், தைத் திருநாளுக்கு முந்தைய நாள் என்பதால், உற்சாகத்துக்கு எந்த வகையிலும் குறைவிருக்காது.

ஆனால், தற்போதிருக்கும் சுற்றுச்சூழல் பிரச்னையில், போகிப் பண்டிகையன்று பழைய பொருள்களைக் போகியில் எரிக்க வேண்டாம் என்று பல்வேறு தரப்பிலும் வேண்டுகோள் வைக்கப்படுகிறது.

ஆனால், எப்படி நாம் பாரம்பரியத்தை விட முடியும், எப்படி போகி கொளுத்தாமல் பண்டிகையைக் கொண்டாடுவது என்று கேட்பவர்களுக்காக சில யோசனைகள்..

கார்பன் பொருள்களை தவிர்க்கலாம்..
எரியும் பொருளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல்  போகும்போதுதான் புகை வரும். அதாவது காகிதம் அல்லது மரத்தை எரிக்கும் பொது அதிலிருந்து புகை வரும். ஏனெனில் அவற்றில் தண்ணீர், கார்பன், சாம்பல் போன்றவை கலந்திருக்கும். எனவே, ஈரமான பொருள்களை எரிப்பதைத் தவிர்க்கலாம். கரித்தூள், காய்ந்த மரக்கட்டை போன்றவற்றை மட்டும் போகியில் எரிக்கலாம்.

அதிக எரிபொருளை பயன்படுத்தாதீர்கள்..
புகையில்லாமல் எரியும் நெருப்பு பிடிக்க சற்று நேரமாகும். ஆனால், மெல்ல எரிந்து கொண்டேயிருக்கும். எனவே, அதிக எரிபொருளை ஊற்றி பெரிய தீயை உருவாக்க வேண்டாம்.

குப்பை மற்றும் ஈரமான பொருள்களை எரிக்க வேண்டாம்
அதிகமான குப்பைகளையும், ஈரமான பொருள்களையும் போகியில் வீச வேண்டாம். அது அதிகமான புகையை ஏற்படுத்தும்.

எத்தனால் பயன்படுத்தலாம்
ஒரு வேளை குப்பையை எரித்து புகை ஏற்படுவதை விரும்பாத நபராக இருந்தால் எத்தனால் நெருப்புக் கட்டியைப் பயன்படுத்தலாம். இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.

மிகச் சிறிய போகியாக இருக்கலாம்
வெறும் காய்ந்த் இலைகள், குச்சிகள், மரக்கட்டைகளை மட்டும் வைத்து மிகச் சிறிய போகியைக் கொளுத்தலாம். நல்ல காற்றோட்டமான இடத்தில் வைத்து எரிக்கும் போது அதற்கு அதிகப்படியான எரிபொருள் தேவைப்படாது.

போகியும் கொண்டாட வேண்டும். அதிக மாசில்லாமலும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நிச்சயம் இந்த வழிகள் உதவலாம். முயற்சித்துப் பாருங்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com