மணப்பாறை அடுத்த வேங்கைகுறிச்சியில், கேலாரி கிடையாது, விஜபிக்கள் கிடையாது, பரிசுகள் கிடையாது, காயங்கள் கிடையாது, கரோனா கட்டுப்பாடுகள் கிடையாது – மாட்டுப் பொங்கல் சிறப்பு வழிபாட்டிற்கு பின் தற்காலிக வாடிவாசல் வழியே சீறிபாய்ந்த காளைகளை திமில் பிடித்து தழுவிய காளையர்கள். இது ஒரு மினி ஜல்லிக்கட்டு.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வேங்கைகுறிச்சியில் பொங்கல் திருநாளின் மறுநாள் மாட்டுப் பொங்கல் அப்பகுதி விவசாய பெருமக்களால் கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டும் வழக்கம்போல் இன்று காலை மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்ட நிலையில், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அங்குள்ள கோட்டை முனிக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து மாரியம்மன் கோயில் திடலில் தற்காலிக வாடிவாசலில் காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் திமில் பிடித்து தழுவினர். கேலரி கிடையாது, விஜபிக்கள் கிடையாது, பரிசுகள் கிடையாது, ஒருவருக்கும் காயங்கள் கிடையாது, கரோனா கட்டுப்பாடுகள் கிடையாது என சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற மினி ஜல்லிக்கட்டுப் போட்டியைக் கண்ட மக்களுக்கு சிறிது நேரம் ஆனந்தத்தை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


