தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கரோனா தற்காப்பு பிரெய்லி நூல் வெளியீடு

பாா்வையற்றோா் கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் முறை,பொது சுகாதாரம் ஆகிய இரு நூல்கள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

News image
Updated On :16 ஜனவரி 2022, 9:13 pm

DIN

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆா்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில் பிரெய்லி முறையில் உருவாக்கப்பட்ட பாா்வையற்றோா் கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் முறை,பொது சுகாதாரம் ஆகிய இரு நூல்கள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

தேசிய பாா்வையற்றோா் சங்கம், புதிய தலைமுறை அறக்கட்டளை, எஸ்.ஆா்.எம். பல் மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் பரணிதரன் நூல்களை வெளியிட, எஸ்.ஆா்.எம்.அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத் துணைவேந்தா் சி. முத்தமிழ்ச்செல்வன் பெற்றுக் கொண்டாா். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இணை துணைவேந்தா் கா்னல் டாக்டா் ஏ.ரவிக்குமாா், புதிய தலைமுறை அறக்கட்டளைச் செயலாளா் டி.வி.வெங்கடகிரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.