நெல் கொள்முதல் குறித்து 4 மாவட்ட விவசாயிகளுடன் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆலோசனை

அமைச்சர் அர.சக்கரபாணி காணொலிக் காட்சி வாயிலாக கலந்துகொண்டு நெல் கொள்முதல் குறித்து கலந்துரையால் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நெல் கொள்முதல் குறித்து  மன்னார்குடியில் 4 மாவட்ட விவசாயிகளுடன் தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையால் நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல் கொள்முதல் குறித்து  மன்னார்குடியில் 4 மாவட்ட விவசாயிகளுடன் தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையால் நிகழ்ச்சி நடைபெற்றது.
Published on
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 4 மாவட்ட விவசாயிகளுடன் தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி காணொலிக் காட்சி வாயிலாக கலந்துகொண்டு நெல் கொள்முதல் குறித்து கலந்துரையால் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சம்பா,தாளடி நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது.கடந்த சில நாள்களாக சம்பா அறுவடை செய்யப்பட்டு அவற்றை விவசாயிகள் அருகில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப்பக்கழகத்தின் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர். இன்னும் இரண்டு வாரத்தில் தாளடி அறுவடை செய்ய உள்ளனர்.

நெல் கொள்முதல் குறித்து கலந்துரையால் நிகழ்ச்சி  மன்னார்குடியில் 4 மாவட்ட விவசாயிகளுடன் அமைச்சர் அர.சக்கரபாணியுடனான காணொலிக் காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவசாயிகள்.

நெல் கொள்முதல், கொள்முதல் நிலையங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் இயக்கம்.விவசாயிகளுக்கு உரிய பணம் வங்கியில் அவர்களின் கணக்கில் சேர்வது, அலுவலர்கள், பணியாளர்ககள் குறித்த புகார் உள்ளிட்ட நெல் கொள்முதலில் உள்ள பிரச்னைகள் குறித்து கோட்டறிந்து. விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி மன்னார்குடியில் புதிதாக கட்டப்பட்ட தமிழக முதல்வரால் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், புதன்கிழமை தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.

இதில், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காணொலி காட்சி வாயிலாக வேளாண்மைத்துறை அமைச்சருடன் உரையாட்டினர்.

விவசாயிகளின் கோரிக்கைகள், புகார்கள், ஆலோசனைகளை அமைச்சர் கேட்டுக்கொண்டு அதற்கான பதில்களை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், 4 மாவட்டங்களை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர்கள், வேளாண்மைத்துறையினர், டிஎன்சிஎஸ்சி அலுவலர்கள், விவசாய சங்கத்தினர், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com