தமிழக வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த வாரம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை முன்னின்று நடத்தினார்.
இந்நிலையில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதையும் படிக்க | கட்சிப் பதவியிலிருந்து விலகியது ஏன்? பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
இதனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெறும் மதுரை திட்டங்கள் தொடக்க விழாவில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.